ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் கருத்துக்கணிப்புக்கு தடை..!
ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தல் வரும் 27ஆம் தேதி நடைபெறும் நிலையில் வாகன சோதனை தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. தொகுதிக்குள் வரும் அனைத்து வாகனங்களும் சோதனைக்கு பின்னரே அனுமதிக்கப்பட்டு வருகின்றன.
வாக்காளர்களுக்கு பணம் மற்றும் பரிசு பொருட்கள் வழங்கப்படுவதாக புகார்கள் அதிகரித்துள்ள நிலையில் கண்காணிப்பு தீவிரபடுத்தப்பட்டுள்ளது. ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் குறித்து வரும் 25ம் தேதி மாலை 6 மணி முதல் மின்னணு ஊடகத்தில் கருத்துக்கணிப்புகளை காட்சிப்படுத்த தடைவிதித்து தமிழ்நாடு தலைமை தேர்தல் அதிகாரி உத்தரவிட்டுள்ளார்.
ஈரோடு கிழக்கு தொகுதியில் வரும் 25ஆம் தேதி மாலை 6 மணியிலிருந்து வாக்குப்பதிவு முடிவடையும் வரை அமலில் உள்ள விதிமுறைகளை தலைமை தேர்தல் அதிகாரி செய்தி குறிப்பாக வெளியிட்டுள்ளார். அதற்குப் பிறகு பொதுக் கூட்டத்தையோ தேர்தல் குறித்து பொதுக்கூட்டத்தையோ ஊர்வலத்தையோ ஒருங்கிணைக்கவோ நடத்தவோ கூடாது என குறிப்பிட்டுள்ளார்.
திரைப்படம், தொலைக்காட்சி, எப்எம், ரேடியோ, வாட்சப், முகநூல் உள்ளிட்ட குறுஞ்செய்தி இணையம் மூலம் தேர்தல் விவகாரத்தை மக்கள் பார்வைக்கு வைக்க கூடாது என்றும் தெரிவித்துள்ளார்.





