--- --:--:-- --

ஆடுகளத்திலேயே மாரடைப்பால் உயிரிழந்த கபடி வீரர்..!

Man,Having,Heart,Attack.,Healthcare,Concept

man having heart attack. healthcare concept

கரூர் மாவட்டம் குளித்தலை அருகே கபடி போட்டியில் பங்கேற்ற இளைஞர் மாரடைப்பால் உயிரிழந்தார். அவரது குடும்பத்தினருக்கு இரண்டு லட்சம் ரூபாய் நிதி உதவி வழங்க முதலமைச்சர் ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.

 

கணக்கப்பிள்ளை ஊரில் நடைபெற்ற கபடி போட்டியில் மாணிக்கம் என்ற இளைஞர் பங்கேற்றார். இரண்டு போட்டிகளில் வெற்றி பெற்று மூன்றாவது போட்டியில் விளையாட காத்துக்கொண்டிருந்த பொழுது அவருக்கு மாரடைப்பு ஏற்பட்டுள்ளது.

 

உடனடியாக அருகில் இருந்து அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டும் சிகிச்சை பலனின்றி கபடி வீரர் மாணிக்கம் உயிரிழந்தார்.

 

இதனிடையே மாணிக்கம் உயிரிழந்தது வருத்தம் அளிப்பதாக கூறியுள்ள முதலமைச்சர் ஸ்டாலின் சிறிது நெஞ்சு வலி இருந்தும் அவர் பயிற்சியில் ஈடுபட்டதாக குறிப்பிட்டுள்ளார். இறந்த மாணிக்கம் குடும்பத்தினருக்கு இரண்டு லட்சம் ரூபாய் நிதி உதவி வழங்க உத்தரவிட்டுள்ளதாகவும் முதலமைச்சர் தெரிவித்துள்ளார்.

 

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon