--- --:--:-- --

நெல்லை பேச்சு வழக்கில் பேசிய பேராசிரியர்..தவறாக புரிந்து தாக்கிய மாணவிகளின் பெற்றோர்..!

10

நெல்லை பேச்சுவழக்கில் பேசிய மதுரை காமராஜர் பல்கலைக்கழக பேராசிரியரை மாணவிகளின் பெற்றோர் தாக்கியதால் பரபரப்பு ஏற்பட்டது. தென்காசி மாவட்டம் ஆலங்குளம் சண்முகராஜா என்பவர் மதுரை காமராஜர் பல்கலைக்கழகத்தில் வரலாற்று துறை உதவி பேராசிரியராக பணியாற்றி வருகிறார்.

 

வழக்கம் போல் வகுப்பறையில் பாடம் நடத்திக் கொண்டிருந்த பொழுது திடீரென அங்கு வந்த 10 பேர் கொண்ட கும்பல் பேராசிரியர் சண்முகராஜாவிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டு தாக்குதல் நடத்தியது. தாக்குதலில் காயமடைந்த சண்முகராஜாவை மாணவிகள் மருத்துவமனையில் அனுமதித்தனர்.

 

இது தொடர்பான புகாரின் பேரில் போலீசார் விசாரணை நடத்தியதில் உதவி பேராசிரியர் சண்முகராஜா நெல்லை பேச்சு வழக்கில் பேசியதால் மாணவிகள் அதனை தவறாக புரிந்து கொண்டு பெற்றோரிடம் தெரிவித்துள்ளனர்.

 

மாணவிகளின் பேச்சை நம்பி பெற்றோர் வாக்குவாதத்தில் ஈடுபட்டதும் தெரியவந்தது. எனினும் போலீசார் சம்பவம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்

 

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon