நீரில் மிதக்கும் ரேஷன் அரிசி..பிளாஸ்டிக் அரிசி..?
கடலூர் மாவட்டம் காட்டுமன்னார்கோவில் அருகே பிளாஸ்டிக் அரிசி குறித்து மக்கள் மத்தியில் பீதி ஏற்படுத்தப்பட்ட நிலையில் வட்டாட்சியர் நேரில் ஆய்வு மேற்கொண்டார்.
இது காட்டுமன்னார் கோவில் அருகில் பிளாஸ்டிக் அரிசி வழங்கியதாக குற்றச்சாட்டு வந்த நிலையில் வட்டாட்சியர் ஆய்வு மேற்கொண்டுள்ளார். ரேஷன் கடையில் வாங்கிய அரிசி தண்ணீரில் மிதப்பதாக பொதுமக்கள் புகார் அளித்தனர். அரிசியை ஆய்வுக்கு வட்டாச்சியர் அனுப்பி வைத்தார்.
பொதுமக்களுக்கு மாற்று அரிசி வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக காட்டுமன்னார்கோவில் வட்டாட்சியர் தகவல் அளித்துள்ளார்.






