--- --:--:-- --

வழி விடாததால் பேருந்து ஓட்டுனரை அடித்த இளைஞர்கள்..!

8

ம்பத்தூர் தொழிற்பேட்டை அருகே இருசக்கர வாகனத்திற்கு வழிவிடவில்லை எனக் கூறி நடுவழியில் அரசு பேருந்தை நிறுத்தி ஓட்டுநரை சரமாரியாக தாக்கிய இரண்டு இளைஞர்களை போலீசார் விசாரித்து வருகின்றனர்.

 

அரசு பேருந்து அம்பத்தூர் தொழிற்பேட்டை சிக்னல் அருகே சென்ற பொழுது பின்னால் இருசக்கர வாகனத்தில் வந்த இளைஞர்கள் வழிவிட சொல்லி ஹாரன் அடித்துக்கொண்டே சென்றுள்ளனர்.

 

அவர்கள் பேருந்தை முந்தி சொல்ல முயன்ற பொழுது இருசக்கர வாகனத்தின் மீது பேருந்து உரசியதால் ஆத்திரமடைந்த இளைஞர்கள் பேருந்தை நிறுத்தி ஓட்டுனர் பார்த்திபனை எட்டி உதைத்து சரமாரியாக தாக்கியுள்ளனர்.

 

காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்று விசாரித்ததில் அவர்களின் பெயர் ஸ்ரீதர், விக்னேஷ் என்பதும் தனியார் நிறுவனத்தில் மார்க்கெட்டிங் ஊழியர்களாக பணிபுரிந்து வருவதும் தெரிய வந்தது.

 

Right Menu Icon