--- --:--:-- --

கல்லூரி மாணவனை திருமணம் செய்து கொண்ட விரிவுரையாளர் காவல் நிலையத்தில் தஞ்சம்..!

10

நாமக்கல் மாவட்டம் பரமத்திவேலூர் அருகே கல்லூரி மாணவனை திருமணம் செய்த விரிவுரையாளர் பாதுகாப்பு கேட்டு காவல் நிலையத்தில் தஞ்சம் அடைந்தார். மீனா பரமத்தி வேலூரில் உள்ள தனியார் கல்லூரியில் விரிவுரையாளராக பணியாற்றி வருகிறார்.

 

இவர் கடந்த நான்காண்டுகளுக்கு மேலாக அதே கல்லூரியில் படிக்கும் மாணவன் பிரவீன் என்பவரை காதலித்து வந்ததாக கூறப்படுகிறது. இவர்களது காதலுக்கு வீட்டாரின் பெற்றோர் எதிர்ப்பு தெரிவித்த நிலையில் திருவண்ணாமலை சென்று திருமணம் செய்து கொண்டனர். பின்னர் பாதுகாப்பு கோரி ஒரே காவல் நிலையத்தில் தஞ்சம் அடைந்தனர்.

 

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon