--- --:--:-- --

காதலர் தினத்தை கொண்டாட கோவா சென்ற காதலர்கள் பிணமாக வந்த சோகம்..!

9

காதலர் தினத்தை கொண்டாட கோவா சென்ற காதல் ஜோடி கடலில் மூழ்கி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. உத்தர பிரதேச மாநிலத்தை சேர்ந்த காதலர்கள், காதலர் தினத்தை கொண்டாட கோவா சென்றுள்ளனர்.

 

அப்பொழுது கோவா கடற்கரையில் விளையாடிக் கொண்டிருந்தபோது எதிர்பாராத விதமாக அலையில் சிக்கி கடலில் மூழ்கியுள்ளனர். மீட்பு குழுவுக்கு தகவல் கொடுக்கப்பட்ட நிலையில் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த மீட்பு குழுவினர் இரண்டு பேரையும் மீட்டு மருத்துவமனையில் அனுமதித்தனர்.

 

ஆனால் இரண்டு பேரையும் பரிசோதித்த மருத்துவர்கள் அவர்கள் ஏற்கனவே உயிரிழந்து விட்டதாக தெரிவித்தனர். இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வரும் நிலையில் காதலர் தினத்தை கொண்டாட கோவா சென்ற காதல் ஜோடி கடலில் மூழ்கி உயரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

 

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon