--- --:--:-- --

பிபிசி நிறுவனத்தில் திடீர் சோதனை எதற்கு? முதல்வர் ஸ்டாலின் கண்டனம்..!

4

பிபிசி நிறுவனத்தில் வருமானவரித்துறை சோதனைக்கு முதலமைச்சர் மு.க ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளார். இது குறித்து ட்விட்டரில் தெரிவித்துள்ளவர் எந்த துடிப்பான ஜனநாயகத்திற்கும் வெளிப்படையான சுதந்திரமான நிறுவனங்கள் இன்றியமையாதவை என குறிப்பிட்டுள்ளார்.

 

பாரதிய ஜனதா தலைமையிலான மத்திய அரசின் கீழ் நாட்டின் மதிப்பு நிறுவனங்கள் முற்றிலும் சுதந்திரத்தை இழந்து விட்டதாக அவர் கூறியுள்ளார். அமலாக்கத்துறை, வருமானவரித்துறை சிபிஐ ஆகியவை அரசியல் கருவிகள் அரசியல் எதிரியை குறிவைக்க பயன்படுத்தப்படுகின்றன எனவும் பிபிசி வருமான வரி சோதனையும் சேர்ந்துள்ளதாக குறிப்பிட்டுள்ளார்.

 

இந்த ஜனநாயகத்தையும் பத்திரிக்கையை சுதந்திரத்தையும் அளிக்க காரணமானவர்களை மக்கள் கவனித்துக் கொண்டிருக்கிறார்கள் எனவும் முதலமைச்சர் ஸ்டாலின் கூறியுள்ளார்.

 

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon