--- --:--:-- --

போலீஸ் போல் நடித்து வியாபாரியிடம் ரூ.1.40 கோடி பணம் பறித்த மர்ம நபர்கள் ..!

3

ந்திராவில் இருந்து சென்னைக்கு நகை வாங்க வந்த வியாபாரியிடம் போலீஸ் எனக்கூறி ஒரு கோடியே நாற்பது லட்சம் ரூபாயை பறித்து சென்ற நபரை இரண்டு தனிப்படை அமைத்து போலீசார் தேடி வருகின்றனர்.

 

நகை வியாபாரியும் அவரது மேலாளரும் பேருந்து மூலம் சென்னைக்கு வந்து ஆட்டோவில் சென்ற பொழுது காரில் வந்த நான்கு டிப்டாப் ஆசாமிகள் தங்களை போலீஸ் என கூறி பணத்தைப் பறித்து சென்றுள்ளனர். காரில் கத்தி, விலங்கு, லத்தி போன்றவை இருந்ததால் அவர்கள் போலீஸ் என நம்பி பணத்தையும் கொடுத்துள்ளனர்.

 

பணத்தை பறிமுதல் செய்ததாக கூறி அவர்கள் எடுத்த சென்ற நிலையில் சற்று நேரத்தில் ஏமாற்றப்பட்டதை உணர்ந்தவர்கள் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர்.

 

Right Menu Icon