--- --:--:-- --

தேர்தலில் ஓட்டுக்கு தலா 6 ஆயிரம் எனக் கூறிய பாஜக எம்.எல்.ஏ..!

5

ர்நாடக சட்டப்பேரவை தேர்தலில் பாஜக வெற்றி பெறுவதற்கு ஓட்டுக்கு தலா 6 ஆயிரம் வழங்க பாஜக மேலிடம் திட்டமிட்டுள்ளதாக ஆடியோ ஆதாரத்துடன் காங்கிரஸ் புகார் அளித்துள்ளது.

 

கர்நாடகாவில் வருகிற ஏப்ரல் அல்லது மே மாதத்தில் சட்டப்பேரவை தேர்தல் நடைபெற உள்ளது. பாஜக நிர்வாகிகள் கூட்டத்தில் பேசும் பொழுது இந்த தேர்தலில் பாஜக கட்டாயம் வெற்றி பெற வேண்டும் என்றும், இதற்காக ஓட்டு ஒன்றுக்கு ரூ.6000 வழங்கலாம் என கூறியுள்ளார்.

 

இது தொடர்பான ஆடியோ வெளியாகி சர்ச்சை ஏற்படுத்தியுள்ளது. இதையடுத்து கர்நாடகா காங்கிரஸ் தலைவர் டி.கே.சிவக்குமார், எதிர்க்கட்சி தலைவர் சித்தராமையா உள்ளிட்டோர் புகார் மனு அளித்துள்ளனர்.

 

Right Menu Icon