மதுரை எய்ம்ஸ் மருத்துவமனை தலைவர் திடீர் மறைவு..!
மதுரையில் மருத்துவமனையின் தலைவராக நியமிக்கப்பட்ட நாகராஜன் – வெங்கட்ராம் மாரடைப்பால் உயிரிழந்தார். மதுரையின் மருத்துவமனையின் தலைவராக நாகராஜன் – வெங்கட்ராமன் நியமிக்கப்பட்டிருந்தார்.
நாகராஜன் சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு வந்தார். சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்தார். மூத்த நரம்பியல் நிபுணரான நாகராஜன் ஆராய்ச்சி குழு தலைவராக இருந்தவர் மதுரையில் புதியதாக அமைய உள்ள எய்ம்ஸ் மருத்துவமனையின் தலைவராக நாகராஜனை கடந்த 2022 ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் நியமித்தது குறிப்பிடத்தக்கது.





