அனைத்து அரசு பள்ளிகளிலும் காலை உணவு திட்டம்..!
தமிழகத்தில் அனைத்து அரசு பள்ளிகளிலும் காலை உணவு திட்டம் அமல்படுத்தப்படும். கிராம சாலைகளை மேம்படுத்த நான்காயிரம் கோடி ரூபாயில் புதிய திட்டம் செயல்படுத்தப்படும் என்பது குறித்த முக்கிய திட்டங்களை முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்தார்.
சட்டப்பேரவையில் ஆளுநர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் போது முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று பதில் உரை அளித்தார். அப்போதே கடந்த ஓராண்டில் ஒன்பதாயிரம் கிலோ மீட்டர் தொலைவுக்கு சுற்றுப்பயணம் செய்து மக்களை சந்தித்து பல்வேறு திட்டங்களை செயல்படுத்தினேன் என்று முதல்வர் கூறினார்.
2023 – 2024 ஆம் ஆண்டு முதல் கிராம சாலைகள் மேம்பாட்டு திட்டத்தின் கீழ் 4,000 கோடி ரூபாய் மதிப்பீட்டில் புதிய சாலைகள் அமைக்கப்படும் என்று கூறினார்.





