மகளையே பாலியல் வன்கொடுமை செய்த தந்தை ..!
மகளை பாலியல் வன்கொடுமை செய்த தந்தைக்கு கோவை மகளிர் நீதிமன்றத்தில் ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. கோவை மாவட்டத்தில் 17 வயது மகளை அவரது 51 வயது தந்தை பாலியல் வன்கொடுமை செய்திருக்கிறார்.
2011 ஆம் ஆண்டு இந்த வழக்குப்பதிவு செய்யப்பட்ட நிலையில் தலைமறைவாக இருந்த குற்றவாளியை 6 மாதங்களுக்கு முன்பு மும்பையில் தமிழக காவல்துறையினர் கைது செய்தனர். தற்பொழுது அவருக்கு ஆயுள் தண்டனை விதித்து கோவை மகளிர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.






