ஓஎல்எக்ஸ்-இல் கம்ப்யூட்டர் உதிரிபாக விற்பனை எனக்கூறி பணமோசடி..!
கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவிலில் ஓஎல்எக்ஸ் இல் கம்ப்யூட்டர் பாகங்கள் விற்பனை செய்வதாக ஏமாற்றி ஆறரை லட்சம் ரூபாய் மோசடி செய்த நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.
கன்னியாகுமரியை சேர்ந்த ஆனந்த என்பவர் ஓஎல்எக்ஸ் நிறுவனத்தை சேர்ந்த புவனேஷ் என்பவரிடம் கம்ப்யூட்டர் உதிரிபாகங்களுக்காக 16 லட்சம் ரூபாயை வாங்கி மூலம் செலுத்தினார்.
ஆனால் வெறும் ஒரு லட்சத்திற்கான உதிரி பாகங்களை மட்டுமே புவனேஷ் அனுப்பி வைத்ததாக கூறப்படுகிறது. மேலும் ஏழரை லட்சம் ரூபாயை அவர் திருப்பிக் கொடுத்ததாகவும் தெரிகிறது.
மீதி ஆறரை லட்சம் ரூபாயை புவனேஷ் திருப்பி தராததால் பாதிக்கப்பட்டவர் காவல் நிலையத்தில் புகார் அளித்திருக்கிறார். இதனையடுத்து புவனேஷ் கைது செய்யப்பட்டார்.






