--- --:--:-- --

முன்னாள் மத்திய அமைச்சர் சரத் யாதவ் காலமானார்..!

2

முன்னாள் மத்திய அமைச்சரும், ஐக்கிய ஜனதா தள கட்சியின் முன்னாள் தலைவருமான சரத் யாதவ் நேற்று இரவு காலமானார். அவருக்கு வயது 75.முதுமை காரணமாக சரத் யாதவன் உடல்நிலை மோசமடைந்ததை யடுத்து ஹரியானா மாநிலம் குருகுராமில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார்.

 

இந்த நிலையில் நேற்று இரவு அவரது உயிர் பிரிந்தது. இதனை சரத் யாதவன் மகள் சுபாஷினி உறுதிப்படுத்தினார். அவரது மறைவுக்கு பல்வேறு கட்சி தலைவர்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

 

பிரதமர் நரேந்திர மோடி ட்விட்டரில் வெளியிட்டுள்ள பதிவில் சரத் யாதவியின் மறைவு வேதனை அளிப்பதாகவும் நீண்ட காலம் பொது வாழ்வில் தனித்து விளங்கியவர் என்றும் தெரிவித்துள்ளார்.

 

மைக்கேல் ஜனதா தளம் கட்சியின் முன்னாள் தலைவரான சரத் யாதவ் மறைந்த முன்னாள் பிரதமர் வாஜ்பாய் அமைச்சரவையில் 1999 முதல் 2004 ஆம் ஆண்டு வரை அமைச்சராக இருந்தார். 2017-இல் மாநிலங்களவை எம்பி ஆகவும் இருந்துள்ளார்.

 

முதலமைச்சர் நிதிஷ்குமார் உடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக கட்சியிலிருந்து சரத் யாதவ் நீக்கப்பட்டார். ஐக்கிய ஜனதா தளம் கட்சி மீது உரிமை கோரி தேர்தல் ஆணையத்தை நாடினார். இவரது கோரிக்கையை தேர்தல் ஆணையம் நிராகரித்தது.

 

Right Menu Icon