--- --:--:-- --

ஓடையில் கார் விழுந்து விபத்து..ஒரே குடும்பத்தை சேர்ந்த ஐந்து பேர் பலி..!

8

தெலுங்கானா மாநிலத்தில் ஓடையில் கார் விழுந்த விபத்திற்கு உள்ளானதில் ஒரே குடும்பத்தை சேர்ந்த ஐந்து பேர் உயிரிழந்தனர். சித்தி பேட்டை மாவட்டத்தில் உள்ள கிராமத்தில் கால்வாயில் அந்த கார் விழுந்து விபத்திற்கு உள்ளானது.

 

காரில் வந்த ஆறு பேரில் மூன்று பெண்கள் ஒரு குழந்தை உட்பட ஐந்து பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். ஒருவர் பலத்த காயமடைந்தார்.

 

தகவல் அறிந்து வந்த சிந்திப்பேட்டை போலீசார் காயமடைந்தவரை மீட்டு அருகில் உள்ள அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். காரில் வந்தவர்கள் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த ஐந்து பேர் என்பது விசாரணையில் தெரியவந்துள்ளது.

 

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon