--- --:--:-- --

பிறந்த 10வது நாளில் கடத்தப்பட்ட குழந்தை தாயை சிறையில் அடைத்த போலீஸ்..!

9

திருச்சியில் பிறந்து 10 நாட்களை ஆன பெண் குழந்தை கடத்தப்பட்ட வழக்கில் நீதிபதியின் உத்தரவின் பேரில் குழந்தையின் தாயை போலீசார் சிறையில் அடைத்தனர். திருச்சி மாவட்டம் லால்குடி அருகே தம்பதிக்கு கடந்தாண்டு செப்டம்பர் 23ஆம் தேதி பெண் குழந்தை ஒன்று பிறந்தது.

 

பிறந்த குழந்தை பத்தாவது நாளிலேயே கடத்தப்பட்ட நிலையில் தலைமறைவாக இருந்த குழந்தையின் தாய் ஜானகியை போலீசார் கைது செய்தனர். விசாரணையை தொடர்ந்து முன்னுக்கு பின் முரணான தகவல்களை ஜானகி தெரிவித்ததால் போலீசார் குழப்பம் அடைந்தனர்.

 

மேலும் விசாரணையில் கிடைத்த தகவலின் அடிப்படையில் வழக்கறிஞர் பிரபுவின் இரண்டாவது மனைவி சண்முகவள்ளியை போலீசார் தேடி வருகின்றனர். இந்த நிலையில் குழந்தை கடத்தப்பட்டு நான்கு நாட்கள் ஆகியும் எந்த துப்பும் கிடைக்காததால் நீதிபதியின் உத்தரவின் பேரில் ஜானகியை போலீசார் சிறையில் அடைத்தனர்.

 

Right Menu Icon