--- --:--:-- --

தண்ணீர் தொட்டியில் தவறி விழுந்த குழந்தை..!

6

கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை அருகே ஒன்றரை வயது குழந்தை ஐந்தடி ஆழ தண்ணீர் தொட்டிக்குள் தவறி விழுந்து உயிரிழந்தது தொடர்பாக போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

 

சோலையூர் கிராமத்தில் இருந்த தம்பதியினருக்கு சிவஸ்ரீ என்ற ஒன்றரை வயது பெண் குழந்தை இருந்தது. இவர்கள் இருவரும் வேலைக்கு செல்வதால் அவரின் கணவரும் குழந்தையை கவனித்து வந்ததாக கூறப்படுகிறது.

 

இன்று காலை மாதம்மாள் வேலைக்கு சென்று விட்ட நிலையில் குழந்தை பக்கத்து வீட்டில் தரைமட்டத்தில் உள்ள மூடி இல்லாத தண்ணீர் தொட்டி அருகே விளையாடிக் கொண்டிருந்த நிலையில் குழந்தையை காணாததால் சித்ரா தேடிய பொழுது குழந்தை தண்ணீர் தொட்டிக்குள் கிடந்தது தெரியவந்தது.

 

சிவ ஸ்ரீயை மீட்டு மருத்துவமனைக்கு கொண்டு சென்ற பொழுது பரிசோதித்த மருத்துவர்கள் குழந்தை இறந்துவிட்டதாக தெரிவித்தனர்.

 

Right Menu Icon