--- --:--:-- --

நடைப்பயிற்சியின் பொழுது பொங்கல் தொகுப்பு வழங்கிய முதலமைச்சர்..!

3

சென்னை, அடையாறு, தொல்காப்பிய பூங்காவில் நடை பயிற்சி மேற்கொண்ட முதலமைச்சர் ஸ்டாலின் அங்கிருந்த பூங்கா ஊழியர்கள் மற்றும் பொதுமக்களுக்கு பொங்கல் பரிசு தொகை வழங்கினார்.

 

திமுக கட்சி நிதியில் பொங்கல் பரிசு தொகுப்பு வழங்குவதற்கான ஏற்பாடுகளை அமைச்சர் சுப்பிரமணியன் மேற்கொண்டார். இதனை தொடர்ந்து முதலமைச்சர் ஸ்டாலின் பொங்கல் பரிசு தொகுப்புகளை வழங்கி மக்களுக்கு வாழ்த்து தெரிவித்தார்.

 

150 பேருக்கு வழங்கப்பட்ட அந்த தொகுப்பில் சேலை, அரிசி, கரும்பு உள்ளிட்டவை இடம் பெற்றிருந்தன. இந்த நிகழ்ச்சியின் பொழுது மூத்த பத்திரிகையாளர் உடன் இருந்தார்.

 

Right Menu Icon