தமிழகத்தில் ஐந்து நாட்களுக்கு மிதமானது வரை மழைக்கு வாய்ப்பு..!
தமிழகத்தில் 5 நாட்களுக்கு லேசானது முதல் மிதமானது வரை மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
கிழக்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக தமிழக கடலோர மாவட்டங்கள் அதனை ஒட்டிய மாவட்டங்கள் புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமானது வரை மழை பெய்யக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
வட தமிழக உள் மாவட்டங்களில் ஒரிரு இடங்களில் அதிகாலை முதல் லேசான பனிமூட்டத்திற்கு வாய்ப்புள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது. சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் லேசான மழை பெய்யக்கூடும் எனவும் கூறப்பட்டுள்ளது. மீனவர்களுக்கு எச்சரிக்கை எதுவும் இல்லை என வானிலை மையம் தெரிவித்துள்ளது.






