--- --:--:-- --

பேருந்தை வழிமறித்து உடற்பயிற்சி மற்றும் ஆட்டம் போட்ட இளைஞர் கைது..!

7

அரசு பேருந்தை நிறுத்தி உடற்பயிற்சி செய்து அதனை வீடியோவாக வெளியிட்ட இளைஞர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது. பேருந்து நிலையம் முன்பு ஆட்டம் ஆடியும் அவர் வீடியோ வெளியிட்டுள்ளார்.

 

சமூக வலைதளங்களில் வித்தியாசமாக வீடியோக்களை பதிவு செய்து கவனம் பெற வேண்டும் என்பதற்காக இளைஞர்கள் இதுபோன்று செயல்களில் ஈடுபடுவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

 

பொது இடங்களில் இடையூறு செய்வது, அரசு பணிகளை தடுப்பது போன்ற செயல்களில் ஈடுபடுபவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என பல்வேறு தரப்பினர் கோரிக்கை விடுத்துள்ளனர்.

 

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon