--- --:--:-- --

திடீரென மயங்கி விழுந்து உயிரிழந்த இளைஞர்..!

9

சென்னை துரைப்பாக்கத்தில் செல்போன் திருடியதில் சிக்கிய இளைஞர் காவல் நிலையம் சென்று வந்த நிலையில் திடீரென உயிரிழந்துள்ளார். பெரம்பூரை சேர்ந்த தினேஷ்குமார் என்பவர் செல்போன் திருட்டு வழக்கில் துரைப்பாக்கம் போலீசாரடம் சிக்கியுள்ளார்.

 

செல்போனை ஒப்படைத்த நிலையில் தினேஷ்குமாரை போலீசார் எச்சரித்து அனுப்பியுள்ளனர். இந்த நிலையில் இரவு தூங்கிவிட்டு எழுந்த தினேஷ் திடீரென மயங்கி விழுந்துள்ளார். பதறிப்போன குடும்பத்தினர் மருத்துவமனைக்கு அழைத்து சென்ற பொழுது வரும் வழியிலேயே உயிரிழந்ததாக மருத்துவர்கள் தெரிவித்தனர்.

 

போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வரும் நிலையில் மாஜிஸ்ட்ரேட் விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. வியாழக்கிழமையன்று மாஜிஸ்ட்ரேட் முன்னிலையில் பிரேத பரிசோதனை நடைபெற உள்ளது.

 

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon