சிறுபான்மையினரின் பாதுகாப்பு இயக்கம் அதிமுக -எடப்பாடி பழனிசாமி..!
எம்ஜிஆர் தனது ஆட்சியில் கிறிஸ்தவர்கள் அனைவரையும் பிற்பட்டவகுப்பினராக வகைப்படுத்தி கல்வி வேலை வாய்ப்புகள் உள்ளிட்ட உரிய பலனை கிடைக்க வழிவகை செய்ததாக எதிர்க் கட்சி தலைவர் பழனிசாமி தெரிவித்துள்ளார்.
அதிமுக சார்பில் சென்னை மாநகரத்தில் நடைபெற்ற கிறிஸ்துமஸ் திருவிழாவில் பழனிசாமி கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார். அப்பொழுது அதிமுக ஆட்சி காலத்தில் தான் கிறிஸ்தவ பெருமக்களின் புனித தலமான ஜெருசலம் சென்று கிறிஸ்தவர்களுக்கு நிதி உதவி அளிக்கப்பட்டதாக பெருமிதம் தெரிவித்தார்.
மேலும் முல்லைப் பெரியாறு அணையில் கட்டிய கிறிஸ்தவ குடும்பங்களார் பென்னி குவிக்கிற்கு மணி மண்டபம் அமைத்து அதனை ஜெயலலிதா திறந்து வைத்ததாகவும் தெரிவித்தார். மேலும் அதிமுக ஆட்சி காலத்தில் கிறிஸ்தவ மக்களுக்கு செய்யப்பட்ட நலத்திட்டங்களை பட்டியலிட்டு பழனிசாமி பேசினார்.
📱 Share on WhatsApp 𝕏 Share on X





