கஞ்சா பதுக்கிய தாய் மற்றும் மகனை கைது செய்த போலீசார்..!
மாரண்ட அள்ளியில் வீட்டில் கஞ்சா பதுக்கி வைத்து விற்பனை செய்து வந்த தாய், மகனை காவல்துறையினர் கைது செய்து அவர்களிடம் இருந்த நான்கு கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்தனர்.
தர்மபுரி மாவட்டத்தில் கஞ்சா விற்பனை நடப்பதாக காவல்துறையினருக்கு தகவல் கிடைத்ததை எடுத்து காவல்துறை தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டனர்.
இந்த நிலையில் மாரண்ட அள்ளி அருகே அத்தியூர் கிராமத்தில் சந்தேகத்திற்கிடமான வகையில் நின்று கொண்டிருந்த தாய் மற்றும் அவரது மகன் சீனிவாசன் ஆகியோரை பிடித்து விசாரணை நடத்தியதில் அவர்களிடம் நான்கு கிலோ கஞ்சா இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து இருவரையும் போலீசார் அதிரடியாக கைது செய்தனர்.
📱 Share on WhatsApp 𝕏 Share on X





