--- --:--:-- --

தமிழ்நாட்டில் இந்த இரண்டு நாட்களில் கனமழைக்கு வாய்ப்பு..!

24

தமிழகத்தில் வரும் 20 மற்றும் 21 ஆம் தேதிகளில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. வரும் 20ஆம் தேதி தூத்துக்குடி, ராமநாதபுரம், சிவகங்கை, புதுக்கோட்டை, தஞ்சை, திருவாரூர், நாகை, மயிலாடுதுறை மற்றும் கடலூர் ஆகிய 9 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாக கணிக்கப்பட்டுள்ளது.

 

அதேபோல் 21ஆம் தேதி புதுக்கோட்டை, தஞ்சை, திருவாரூர், உள்ளிட்ட 12 மாவட்டங்களில் கனமழையும் புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் இடியுடன் கூடிய லேசானது முதல் மிதமானது வரை மழை பெய்யக்கூடும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

இலங்கை கடலோரத்தில் தென்மேற்கு வங்க கடல் பகுதிகள், மன்னார்குடி, கன்னியாகுமரி கடல் பகுதிகளில் வரும் 19ஆம் தேதி முதல் 21ஆம் தேதி வரை சூறைக்காற்று வீசப்படும் என்பதால் மீனவர்கள் செல்ல வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

 

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon