--- --:--:-- --

கர்ப்பத்தை அறிவிக்காமல் மறைத்தது ஏன்? நடிகை ஸ்ரேயா சொன்ன பெரிய காரணம்

22

குழந்தை பிறந்து ஒரு வருடம் கழித்து தான் உலகத்திற்கு தான் தாயான விஷயத்தை அறிவித்தார் ஸ்ரேயா. கர்பத்தை மறைத்தது ஏன்? இது தான் காரணமாம்.

 

நடிகை ஸ்ரேயா சரண் தமிழ், தெலுங்கு உள்ளிட்ட மொழிகளில் பல முன்னணி ஹீரோக்களுக்கு ஜோடியாக நடித்து இருக்கிறார். அவருக்கு 2018ல் ரஸ்யாவை சேர்ந்த டென்னிஸ் வீரர் Andrei Koscheev என்பவரை திருமணம் செய்துகொண்டார்.

 

தற்போது அவர்களுக்கு ராதா என்கிற பெண்குழந்தையும் இருக்கிறது. ஸ்ரேயா தான் கர்ப்பமாக இருப்பதை அறிவிக்கவே இல்லை, ஆனால் திடீரென ஒருநாள் தனக்கு பெண் குழந்தை இருக்கிறது, அவளுக்கு ராதா என பெயர் சூட்டி இருக்கிறோம் என அறிவித்தது ரசிகர்களுக்கு ஷாக் கொடுத்தது.

 

இந்நிலையில் தற்போது ஸ்ரேயா அளித்திருக்கும் பேட்டியில் தான் கர்பத்தை மறைக்க என்ன காரணம் என விளக்கி இருக்கிறார்.
” நிறைய பயம் இருந்தது. நான் எனக்காக நேரம் செலவழிக்க விரும்பினேன். நான் குண்டாகி இருந்ததை பற்றி கூட கவலைப்படவில்லை. என்னை பற்றி யார் என்ன எழுதினாலும் கவலை இல்லை நான் குழந்தை மீது மட்டும் கவனம் செலுத்தினேன்.

 

“நான் கர்ப்பமாக இருப்பதை அறிவித்தால் அதன் பின் மீண்டும் சினிமாவுக்கு வர நீண்ட காலம் எடுக்கும். யாரும் உடனே வாய்ப்பு கொடுக்க மாட்டார்கள்.” “நான் எனக்கு குழந்தை பிறந்ததை அறிவித்தபோது ஏற்கனவே படங்களில் கமிட் ஆகி நடித்துக் கொண்டிருந்தேன்.

 

அப்போது ராதா 9 மாத குழ்நதை. படத்தில் நடிப்பதற்காக உடல் எடையை அதிகம் மெனக்கெட்டு குறைத்தது பிரெஷர் ஆக இருந்தது” என ஸ்ரேயா கூறி இருக்கிறார்.

Right Menu Icon