--- --:--:-- --

தமிழகம் மற்றும் புதுச்சேரியில் ஐந்து நாட்கள் மிதமான மழைக்கு வாய்ப்பு..!

13

மிழகத்தில் 5 நாட்களுக்கு லேசானது முதல் மிதமானது வரை மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

 

கிழக்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக இன்று முதல் ஐந்து நாட்களுக்கு தமிழகம் மற்றும் புதுச்சேரி பகுதிகளில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமானது வரை மழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது.

 

சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் வானம் மேகம் முகத்துடன் காணப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அந்தமான் கடல், தென்கிழக்கு வங்க கடல், தென்கிழக்கு அரபி கடல் பகுதிகளில் சூறாவளி காற்று வீச கூடும் என்பதால் மீனவர்கள் இந்த பகுதிகளுக்கு செல்ல வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

 

Right Menu Icon