திருவண்ணாமலையில் திருவிழாக் கூட்டத்தில் காணாமல் போகும் குழந்தைகளை பாதுகாக்க புதிய ஏற்பாடு..!
திருவண்ணாமலையில் குழந்தைகளின் கையில் அவர்களின் பெற்றோர்களின் தொலைபேசி எண் மற்றும் காவல்துறை கட்டுப்பாட்டு அறை எண் எழுதிய பட்டை கட்டப்பட்டு வருகிறது. திருவண்ணாமலையில் மகா தீபம் ஏற்றப்பட்டுள்ளது.
13 தற்காலிக பேருந்து நிலையங்கள் ஏற்படுத்தப்பட்டுள்ளது. இங்கிருந்து வரும் குழந்தைகளின் கையில் பெற்றோர்களின் பெயர்,தொலைபேசி எண் எழுதக்கூடிய பணியை காவல்துறையினர் மேற்கொண்டு வருகின்றனர். பல்வேறு ஊர்களில் இருந்து வரும் குழந்தைகள் காணாமல் போய்விடக் கூடாது என்பதற்காக இதுபோன்ற ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
📱 Share on WhatsApp 𝕏 Share on X





