பள்ளியை நீர் சூழ்ந்ததால் விடுமுறை அறிவிப்பு..!
மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடியில் சங்கரன் பந்தல் வீரசோழன் ஆற்றில் இருந்து வடிகால் வழியாக வெளியேறிய தண்ணீர் அரசு பள்ளி வளாகத்தை சூழ்ந்துள்ளது. கடந்த மாதம் பெயரை கனமழை காரணமாக அரசு உயர்நிலைப் பள்ளியில் தேங்கி இருந்த நீர் வடிகால் வழியாக வெளியேற்றப்பட்டது.
இந்நிலையில் அதை சீரமைக்காமல் இருந்ததால் நேற்று பெய்த கனமழையின் காரணமாக பள்ளி வளாகத்தை நீர் சூழ்ந்துள்ளது. இதையடுத்து மாணவர்கள் வர இயலாததால் பள்ளிக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.






