--- --:--:-- --

மகாதீபம் ஏற்றுவதற்காக ஆறடி உயரக் கொப்பரை மலை உச்சியில் கொண்டு செல்லப்பட்டது..!

1

திருவண்ணாமலை அருணாச்சலேஸ்வரர் கோயிலில் கடந்த மாதம் 27ஆம் தேதி கொடி ஏற்றத்துடன் கார்த்திகை தீபத் திருவிழா தொடங்கியது. அதைத் தொடர்ந்து ஒவ்வொரு நாளும் பகலிலும் இரவிலும் சாமி வீதி உலா நடைபெற்றது.

 

ஏழாம் நாளில் மகா ரத தேரோட்டம் விமர்சையாக நடந்தது. ஒன்பதாம் நாளான நேற்று பஞ்ச மூர்த்திகள் ஆன விநாயகர், முருகர், அண்ணாமலையார், பராசக்தி அம்மன், சண்டிகேஸ்வரர் தனித்தனி வாகனங்களில் உலா வந்தனர். இன்று அதிகாலை 4 மணிக்கு கோவிலில் பரணி தீபம் ஏற்றப்பட்டது.

 

இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு வழிபாடு நடத்தினர். இன்று மாலை 6:00 மணிக்கு 2,068 உயர மலையின் உச்சியில் மகா தீபம் ஏற்றப்பட்டு உள்ளது. இதற்காக ஆறடி உயர கொப்பரை மலை உச்சிக்கு தலைசுமையாக கொண்டு செல்லப்பட்டது.

 

தீபத் திருவிழாவிற்காக திருவண்ணாமலைக்கு சிறப்பு ரயில்கள் இயக்கப்பட்டு வருகின்றன. 85 இடங்களில் சிறப்பு மருத்துவ முகாம்கள் தயார் நிலையில் உள்ளன. 12 ஆயிரம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

 

Right Menu Icon