--- --:--:-- --

திருவாடானை நீதிமன்றத்தில் வழக்கறிஞர்களுக்கு கிரிமினல் வழக்கு பயிற்சி வகுப்பு நடத்தப்பட்டது..!

11

ராமநாதபுரம் மாவட்டம், திருவாடானையில் ஒருங்கிணைந்த நீதிமன்றம் உள்ளது. நீதிமன்றத்தில் உயர்நீதிமன்ற வழிகாட்டுதலின்படி நீதிமன்றத்தில் குற்ற வழக்குகள் நடத்துவது பற்றிய சட்ட நுணுக்கள் பற்றிய பயிற்சி வகுப்பு நடைபெற்றது.

இந்த பயிற்சி வகுப்பு மாவட்ட நீதிபதி பரணிதரன் தலைமையில், திருவாடானை வழக்கறிஞர் சங்க தலைவர் வழக்கறிஞர் கணேசபிரபு அனைவரையும் வரவேற்றார். திருவாடானை மாவட்ட உரிமையியல் நீதிபதி மனிஷ்குமார் வரவேற்புரை ஆற்றினார்.

சிறப்புரையாக உயர்நீதிமன்ற வழக்கறிஞர் கருப்பசாமி பாண்டியன்,
இளம் வழக்கறிஞர்கள் குற்ற வழக்குகளில் சட்டத்தில் உள்ள நுணுக்கங்களையும் அதில் பிரிவுகளையும், வழக்கு நடத்துவது பற்றியும், எதிரிகளை விசாரணை செய்வது, குறுக்கு விசாரணை செய்வது வழக்கு நடத்துவது போன்ற பல்வேறு வகையான சட்டம் நுணுக்கங்களை விளக்கினார் .

மேலும், வழக்கறிஞர்கள் கேட்ட கேள்விகளுக்கு உரிய பதில் அளித்தார்.
இந்நிகழ்வில் திருவாடானை நீதித்துறை நடுவர் நீதிபதி பிரசாத், மற்றும் ராமநாதபுரம், புதுக்கோட்டை, அறந்தாங்கி, முதுகுளத்தூர், பரமக்குடி கடலாடி, ராமேஸ்வரம் உள்ளிட்ட நீதிமன்றங்களில் இருந்து வழக்கறிஞர்கள் ஏராளமானோர் கலந்து கொண்டு பயன்பெற்றனர். வழக்கறிஞர் சங்க செயலாளர் சுரேஷ் நன்றி தெரிவித்தார்.

Right Menu Icon