--- --:--:-- --

குண்டு வெடிப்பு வழக்கு NIAக்கு மாற்றப்படுகிறதா..!

3

கர்நாடக மாநில மங்களூருவில் ஆட்டோவில் வெடிகுண்டு வெடித்தது தொடர்பான வழக்கு தேசிய புலனாய்வு முகமைக்கு மாற்றப்படும் என அம்மாநில ஏடிஜிபி கூறியுள்ளார். வெடிகுண்டு வெடித்த இடத்தில் இருந்து பறிமுதல் செய்யப்பட்ட பொருட்களை பார்வையிட்ட பின் அவர் செய்தியாளர்களை சந்தித்தார்.

 

அப்பொழுது பேசியவர் குண்டு வெடிப்பு தொடர்பாக மைசூரில் இரண்டு பேரிடமும், கோவையில் ஒருவரிடமும் விசாரணை நடைபெற்று வருவதாக கூறினார்.

 

ஆட்டோவில் பயணித்த நபருக்கு வெளிநாட்டு பயங்கரவாத அமைப்புடன் தொடர்பு இருக்கிறதா என்று கோணத்தில் விசாரணை நடைபெற்று வருவதாகவும் விரைவில் தேசிய புலனாய்வு தேசிய புலனாய்வு முகமைக்கு விசாரணை மாற்றப்படும் எனவும் கூறினார்.

 

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon