--- --:--:-- --

நீட் தேர்வில் தவறான கேள்விக்கு பதில் அளித்த மாணவனுக்கு கருணை மதிப்பெண் வழங்க இடைக்கால தடை..!

2

நீட் தேர்வில் தவறான கேள்விக்கு பதில் அளிப்பதை தவிர்த்த மாணவருக்கு கருணை மதிப்பெண் வழங்க சென்னை உயர்நீதிமன்ற பிறப்பித்த உத்தரவுக்கு உச்சநீதிமன்றம் இடைக்கால தடை விதித்துள்ளது. நீட் தேர்வில் பங்கேற்ற திண்டிவனத்தை சேர்ந்த உதயகுமார் என்ற மாணவர் தவறான கேள்வி ஒன்றுக்கு பதிலளிக்காமல் தவிர்த்து உள்ளார்.

 

பட்டியலின வகுப்பை சேர்ந்தவர்களுக்கு கட் ஆப் மதிப்பெண்களாக 93 நிர்ணயிக்கப்பட்ட நிலையில் இவர் 92 மதிப்பெண்கள் பெற்றுள்ளார். இதனால் விடையளிக்காமல் தவிர்த்த கேள்விக்கு கருணை மதிப்பெண் வழங்க கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.

 

இதையடுத்து பாதிக்கப்பட்ட மாணவருக்கு கருணை மதிப்பெண்களாக நான்கு மதிப்பெண்கள் வழங்க உயர்நீதிமன்ற உத்தரவிட்டது. இதை எதிர்த்து தேசிய தேர்வுகள் முகமை உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்து இருந்தது.

 

இந்த மனு மீது மாணவர் தரப்பு பதில் அளிக்க நோட்டீஸ் பிறப்பித்த நீதிபதிகள் சென்னை உயர்நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவுக்கு இடைக்கால தடை விதித்தனர்.

 

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon