ஆதார் அட்டையை 10 ஆண்டுகளுக்கு ஒரு முறை கட்டாயம் புதுப்பிக்க வேண்டும்..!
ஆதார் அட்டையை 10 ஆண்டுகளுக்கு ஒரு முறை கட்டாயம் புதுப்பிக்க வேண்டும் என மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. இது தொடர்பாக மதிய முன்னணி மற்றும் தகவல் தொழில்நுட்பத்துறை மாநில அரசுகளுக்கு வெளியிட்டுள்ள உத்தரவில் ஆதார் அட்டைதாரர்கள் அதன் பதிவு செய்யப்பட்ட தேதி முடிந்து பத்தாண்டுகள் கடந்துவிட்டால் ஆதாரை புதுப்பிக்க வேண்டும் என்று கூறியுள்ளது.
புகைப்படத்துடன் கூடிய அடையாள ஆவணத்தையும் முகவரியுடன் கூடிய அடையாள ஆவணத்தையும் அளித்து ஆதார் அட்டையை புதுப்பிக்க வேண்டும் என வழிமுறைகள் வழங்கப்பட்டுள்ளன. மை ஆதார் இணையதளம் மற்றும் செயலி மூலம் ஆதார் அட்டையை குறிப்பிட்டுக் கொள்ளலாம் என்று மத்திய அரசு கூறியுள்ளது.
ஆதார் எண் வழங்கியதில் இருந்து பத்து ஆண்டுகள் கடந்தவர்கள் கட்டாயம் ஆதார் அட்டையை புதுப்பிப்பது அவசியம் என்று கூறியுள்ள மத்திய அரசு இதன் மூலம் மத்திய அடையாள தரவுகள் சேமிப்பு துல்லியமாக இருப்பதை உறுதி செய்ய முடியும் என்று நம்பிக்கை தெரிவித்துள்ளது.
📱 Share on WhatsApp 𝕏 Share on X





