ரேஷன் கடையில் பெயர் சேர்க்க, திருத்தம் செய்ய 12-ம் தேதி முகாம்..!
ரேஷன் கடையில் பெயர் சேர்க்க, திருத்தம் செய்ய சென்னையில் 12-ம் தேதி பொதுவிநியோகத் திட்ட குறைதீர்ப்ப முகாம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பாக தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் இந்த மாதத்திற்கான பொது விநியோகத் திட்டம் மக்கள் குறைதீர் முகாம் சென்னையில் உள்ள உதவி ஆணையர் அலுவலகத்தில் காலை 10 மணி முதல் மதியம் ஒரு மணி வரை நடக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதில் ரேஷன் அட்டைகளில் பெயர் சேர்க்க, பெயர் நீக்கம், முகவரி மாற்றம், செல்போன் எண் மாற்றம், புதிய ரேஷன் அட்டை நகல் உள்ளிட்டவை ஏற்றுக் கொள்ளப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.





