--- --:--:-- --

இன்று நிகழவுள்ள முழு சந்திர கிரகணம்..!

2

ந்த ஆண்டின் இறுதி மற்றும் முழு சந்திர கிரகணம் இன்று நிகழவுள்ளது. சந்திர கிரகணத்தை வெறும் கண்களால் மக்கள் காண முடியும். சந்திரன் தோன்றும் நாளில் சூரியன், பூமி, சந்திரன் ஆகிய மூன்றும் நேர்கோட்டில் வரும். பூமியின் நிழல் சந்திரனை மறைப்பதால் சந்திர கிரகணம் ஏற்படுகிறது.

 

இந்த ஆண்டின் இறுதி மற்றும் முழு சந்திர கிரகணம் இன்று நிகழவுள்ளது. இந்திய நேரப்படி பகல் 2:39 மணி முதல் மாலை 6:19 மணி வரை சந்திர கிரகணம் நீடிக்கிறது. இதனை மக்கள் வெறும் கண்களால் காண முடியும். ஆனால் மாலைக்கு பிறகு தெரிய வாய்ப்புள்ளது.

 

இதில் முழு சந்திர கிரகணம் 3.45 மணியிலிருந்து 5.11 மணி வரை நீடிக்கும். பின்னர் 6.19 மணி வரை பகுதியளவு கிரகணத்தை காணலாம். தென் அமெரிக்கா, வட அமெரிக்கா, ஆஸ்திரேலியா பகுதிகளில் சந்திர கிரகணத்தை காண இயலும்.

 

இந்தியாவில் முழுமையான சந்திர கிரகணத்தை கொல்கத்தா, தௌஹாத்தி, தோகுமா, அகர்தலா உள்ளிட்ட கிழக்கு மற்றும் வடகிழக்கு பகுதிகளில் இருந்து காண முடியும் என ஆய்வாளர்கள் கூறியுள்ளனர்.

 

Right Menu Icon