பிரசவத்தின் போது குழந்தைக்கு ஏற்பட்ட கைமுறிவு..!
ஓசூர் அருகே அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் செவிலியர்கள் பிரசவம் பார்த்ததில் பச்சிளம் குழந்தைக்கு கைமுறிவு ஏற்பட்ட சம்பவம் பெற்றோர்களிடையே அதிர்ச்சி ஏற்படுத்தியுள்ளது. ஓசூர் அருகே உள்ள குதூர் கிராமத்தை சேர்ந்த சிவகுமார் என்பவரது மனைவி வசந்தாவுக்கு பிரசவ வலி ஏற்பட்டதை தொடர்ந்து கடந்த 20ஆம் தேதி அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் பிரசவத்திற்காக அனுமதிக்கப்பட்டார்.
அந்த மருத்துவர்கள் இல்லாததால் செவிலியர்களை பிரசவம் பார்த்ததாக கூறப்படுகிறது. குழந்தை பிறந்த பொழுது குழந்தையின் வலது கையில் மூன்று இடங்களில் எலும்பு முறிவு ஏற்பட்டுள்ளது.
இதையடுத்து எலும்பு முறிவு குறித்து உறவினர்களுக்கு தெரியாமல் உடனடியாக குழந்தையையும் தாயையும் ஓசூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். அதன் பின்னரே குழந்தைக்கு கைமுறிவு ஏற்பட்டது குறித்து உறவினர்களுக்கு தெரிய வந்தது.
📱 Share on WhatsApp 𝕏 Share on X





