கோவை கார் வெடிப்பில் புதிய தகவல்..!
கோவை கார் வெடிப்பில் கைதான ஃபெரோஸ் கேரளா சிறையில் உள்ளவர்களை சந்தித்தது விசாரணையில் தெரியவந்துள்ளது. NIAவால் கைது செய்யப்பட்டு கேரளாவின் வியூர் சிறையில் உள்ள ரசித் அலி, முஹம்மது அசாருதீனை பெரோஸ் சந்தித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
தனிப்படை காவல்துறையின் விசாரணையில் பெரோஸ் கேரளா சென்றிருந்தது தெரியவந்துள்ளதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.






