மனநலம் பாதிக்கப்பட்ட நபரை சித்தர் என நம்ப வைத்த கும்பல்..!
கரூர் அருகே மனநலம் பாதிக்கப்பட்ட நபரை சித்தர் என நம்ப வைத்து ஒரு கும்பல் பணம் வசூலிப்பதாக புகார் எழுந்துள்ளது. அரவக்குறிச்சி கோயில் பகுதியில் சுப்பிரமணி என்பவர் மனநலம் பாதிக்கப்பட்ட நெடுஞ்சாலையோரம் சுற்றி வந்ததாக கூறப்படுகிறது.
அந்த பகுதியை சேர்ந்த சிலர் அவரை நெடுஞ்சாலை சித்தர் என்று சாமியாராக மாற்றி கொட்டகை அமைத்து தங்க வைத்துள்ளனர். எந்தத் துணையும் இல்லாமல் உடல் முழுவதும் விபூதியை பூசி அவரருகே உண்டியலை வைத்து வசூல் செய்து வருவதாகவும் கூறப்படுகிறது.
இது குறித்து போலீசார் நடவடிக்கை என குற்றம் சாட்டி வரும் தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் அவர்களை பார்க்க வருவோர் எதுவும் வழங்க வேண்டாம் என எச்சரிக்கை விடுத்துள்ளனர்.






