சுற்றுலா வந்த இருவர் கடலில் குளித்த போது நீரில் மூழ்கி உயிரிழப்பு..!
புதுக்கோட்டைக்கு சுற்றுலா வந்த இருவர் கடலில் குளித்த போது நீரில் மூழ்கி உயிரிழந்தனர். பெங்களூருவில் இருந்து வந்தவர் குளித்துக் கொண்டிருந்த பொழுது கடல் அலையில் சிக்கினார்.
சம்பவ இடத்துக்கு வந்த தீயணைப்புத் துறையினர் ஒருவரை பத்திரமாக மீட்டு இருவரை சடலங்களாக கண்டெடுத்தனர். இதேபோல் அலையில் சிக்கிய குஜராத்தை சேர்ந்த ஒருவரும் மீட்கப்பட்டார்.
📱 Share on WhatsApp 𝕏 Share on X





