--- --:--:-- --

புல்வெளியில் பாய்ந்து விபத்தில் சிக்கிய விமானம்..!

2

பிலிப்பைன்ஸில் விமானம் தரையிறங்கும் பொழுது ஓடுதளத்தை விட்டு விலகி புல்வெளியில் பாய்ந்து விபத்தில் சிக்கியது. தென் கொரியாவில் இருந்து 162 பயணிகள் 11 பணியாளர்களுடன் ஒரு விமானம் தரையிறக்கப்பட்டது.

 

தொடர் கனமழையால் இரண்டு முறை விமானத்தை தரையிறக்க விமானி மேற்கொண்ட முயற்சி தோல்வியில் முடிந்தது. சிறிது நேரம் வானில் வட்டமிட்டு மூன்றாவது முறையாக தரை இறங்கிய பொழுது ஓடுதளத்தில் இருந்து விலகி புல்வெளியில் பாய்ந்து.

 

இதனால் விமானத்தின் ஒரு பகுதி சேதமானது. எனினும் பயணிகள் யாருக்கும் எந்த பாதிப்பும் ஏற்படவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon