--- --:--:-- --

மகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த தந்தை..!

8

 நாகை அருகே மகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த கணவரை அரிவாளால் வெட்டிக் கொன்ற மனைவி உள்ளிட்ட 5 பேர் கைது செய்யப்பட்டனர். திருமருகல் அடுத்த கிராமத்தை சேர்ந்த ஒருவர் மது போதையில் பெற்ற மகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக புகார் கொடுக்கப்பட்டுள்ளது.

 

இதனையடுத்து அவர் வீட்டில் இருந்து விரட்டி அடிக்கப்பட்டார். இதை தொடர்ந்து மகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த கணவர் மீது ஆத்திரத்தில் இருந்த அவரது மனைவி, தனது சகோதரி, சகோதரியின் கணவன் உறவினர்கள் என ஐந்து பேருடன் சேர்ந்து அவரை அரிவாளால் வெட்டி கொலை செய்தனர்.

 

இது குறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார் கொலை செய்த 5 பேரை கைது செய்து சிறையில் அடைத்தனர்.

 

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon