--- --:--:-- --

இன்று முதல் கனமழைக்கு வாய்ப்பு..!

2

தமிழ்நாட்டில் பல்வேறு மாவட்டங்களில் இன்று முதல் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருக்கிறது.

 

கன்னியாகுமரி, தென்காசி, தேனி, திண்டுக்கல், கோவை பகுதிகளில் இன்று மிக கன மழைக்கு வாய்ப்பிருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. நெல்லை, விருதுநகர், மதுரை உள்ளிட்ட 11 மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் இன்று கனமழை பெய்யக்கூடும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

தமிழக கடலோரப் பகுதிகளில் நிலவும் வளிமண்டல அடுக்கு சுழற்சி காரணமாக அடுத்த 5 ஆண்டுகளில் மழை தொடரும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

சென்னையை பொறுத்தவரை சில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்யக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. வங்கக்கடலில் வரும் 20ஆம் தேதி காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகக் கூடும் என கணிக்கப்பட்டுள்ளது.

 

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon