வைகை அணைக்கு வரும் நீரின் வரத்து 7 ஆயிரம் கனஅடியாக அதிகரிப்பு..!
தொடர் கனமழை காரணமாக வைகை அணைக்கு வரும் நீரின் வரத்து 7 ஆயிரம் கனஅடியாக அதிகரித்துள்ளது. அணையின் பாதுகாப்பு கருதி உபரி நீர் அப்படியே வெளியேற்றப்படுவதால் 5 மாவட்டங்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டது.
தேனி மாவட்டம் ஆண்டிப்பட்டி அருகே அமைந்துள்ள வைகை அணையின் நீர்மட்டம் 70 அடியை எட்டியது. மொத்தம் 71 அடி உயரம் கொண்ட அணையில் தற்போது 7 ஆயிரம் கனஅடி தண்ணீர் வந்து கொண்டிருப்பதால் முன்னெச்சரிக்கையாக அணைக்கு வரும் தண்ணீர் அப்படியே வெளியேற்றப்பட்டு வருகிறது.
எனவே வைகை நதியில் பாயும் தேனி, மதுரை, திண்டுக்கல், ராமநாதபுரம் ஆகிய 5 மாவட்டங்களில் கரையோரம் வசிக்கும் மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு செல்ல அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
📱 Share on WhatsApp 𝕏 Share on X





