ஆற்றில் அடித்து செல்லப்பட்ட கணவரை காப்பாற்ற முயன்ற மனைவி..!
தேனி மாவட்டம் போடி அருகே ஆற்றில் அடித்து செல்லப்பட்ட கணவரை காப்பாற்ற முயன்ற மனைவியும் உறவினரும் ஆற்றில் இழுத்துச் செல்லப்பட்டுள்ளனர். கனமழையால் பெரியாற்று பகுதியில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடியது.
திருமணமாகி ஒரு மாதமே ஆன தம்பதியர் உறவினர் வீட்டிற்கு விருந்திற்காக வந்த பொழுது ஆற்றில் குளிக்க சென்றுள்ளனர். நீர்வீழ்ச்சி அருகே ஆற்றில் இறங்கிய ராஜா தடுமாறி விழுந்ததில் அவரை கை பிடித்து காப்பாற்றும் முயன்ற காவியாவும் உறவினருடன் சேர்ந்து ஆற்றில் அடித்துச் செல்லப்பட்டதாக கூறப்படுகிறது.
பாறை ஒன்றை பிடித்ததால் தப்பிய மற்றொரு உறவுக்கார சிறுவன் அளித்த தகவலின் பேரில் சிறுவனை அங்கு விரைந்த தீயணைப்பு துறையினர் மூன்று பேரின் உடல்களையும் சடலமாக மீட்டனர்.





