அரசு பேருந்தில் பாதுகாப்பற்ற முறையில் பயணம் செய்யும் மாணவர்..!
திருவாரூர் மாவட்டம் மன்னார்குடியில் அரசு பேருந்தில் பாதுகாப்பற்ற முறையில் பயணம் செய்யும் மாணவர்களின் வீடியோ சமூக வலைதளங்களில் பரவி வருகிறது.
அவர்கள் பேருந்தின் படிக்கட்டில் ஒரு காலையும், மற்றொரு காலை கீழே போட்டவாறும், அவ்வாறு இல்லையெனில் இரண்டு காலையும் கீழே தொங்க விட்டவாறு செல்கின்றனர். இது பொது மக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது.






