நிலவின் தோற்றம் பற்றி விஞ்ஞானிகள் தீவிர ஆராய்ச்சி..!
நிலவின் தோற்றம் பற்றி விஞ்ஞானிகள் தீவிர ஆராய்ச்சியில் ஈடுபட்டுக் கொண்டிருக்க அது சில மணி நேரத்திலேயே உருவாகி விட்டது என புதிய ஆய்வில் தெரியவந்துள்ளது. பூமியிலிருந்து 3.84 லட்சம் கிலோ மீட்டர் தொலைவில் அமைந்துள்ள நிலவைப் பற்றி அமெரிக்கா, ரஷ்யா மற்றும் இந்தியா உள்ளிட்ட நாடுகளைச் சேர்ந்த விஞ்ஞானிகள் இந்த ஆராய்ச்சியில் ஈடுபட்டுள்ளனர்.
இதற்காக இந்தியா சார்பில் சந்திராயன் விண்கலம் அனுப்பப்பட்டு அதற்கான பரிசோதனை முயற்சிகள் நடைமுறையில் உள்ளன. ஆய்வுகளின் முடிவு தெரியாத நிலையில் நிலவு பற்றி புதிய தகவல் ஒன்று வெளியாகியுள்ளது.
உருவாக பல நூற்றாண்டுகள் ஆகியிருக்கும் என கூறப்படும் நிலையில் இந்த புதிய ஆய்வு ஒன்று அதனை மறுக்கும் வகையில் அமைந்துள்ளது. அதாவது நிலவின் தோற்றம் என்பது சில மணிநேரத்தில் உருவானது என ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது.





