--- --:--:-- --

விசாரணைக்கு பிறகு வெளியே வந்த நடிகருடன் ரசிகர்கள் செல்பி..!

9

சின்னத்திரை நடிகை திவ்யா அளித்த புகாரின்பேரில் போலீசார் 4 மணி நேரம் விசாரணை மேற்கொண்டனர். சின்னத்திரை நடிகர் நயினார் முகம்மதும் திவ்யாவும் காதலித்து வந்த நிலையில் நான்கு மாதங்களுக்கு முன்பு திருமணம் செய்து கொண்டனர்.

 

இந்த நிலையில் அவர் தன்னை அடித்து துன்புறுத்துவதாகவும் அவருக்கு ஏற்கனவே திருமணமாகி குழந்தைகள் இருப்பதாகவும் கூறி திவ்யா புகார் அளித்தார். இந்த புகார் போரூரில் உள்ள அனைத்து மகளிர் காவல் நிலையத்திற்கு மாற்றப்பட்டு நான்கு மணி நேரம் விசாரணை நடத்தப்பட்டது.

 

ஆஜராகாமல் இருந்ததால் மீண்டும் அழைக்கும் பொழுது விசாரணைக்கு ஆஜராக வேண்டும் என அறிவுறுத்தப்பட்டது. இதையடுத்து விசாரணைக்கு பிறகு வெளியே வந்த நடிகருடன் ரசிகர்கள் சிலர் ஆர்வத்துடன் புகைப்படம் எடுத்துக் கொண்டதும் வியப்பை ஏற்படுத்தியது.

 

Right Menu Icon