--- --:--:-- --

பிச்சை எடுக்கப் போவதாக கூறும் பாஸ்கரனந்தா..!

8

திருப்பூர் மாவட்டம் பல்லடத்தில் நீதிமன்ற ஆணையின்றி தனது ஆசிரமம் இடிக்கப்பட்டுள்ளதாக சாமியார் பாஸ்கரனந்தா வேதனையுடன் கூறியுள்ளார். செல்வ குமார் என்பவரிடம் நிலத்தை குத்தகைக்கு பெற்று பாஸ்கரன் அந்த ஆசிரமம் நடத்தி வந்துள்ளார்.

 

இதற்கிடையே செல்வகுமார் வங்கியில் வாங்கிய கடனை திருப்பி செலுத்த வில்லை என்பதால் வேறு ஒருவருக்கு அந்த இடம் எழுதப்பட்டதாகக் கூறப்படுகின்றது. அந்த இடத்தில் இரவோடு இரவாக பாஸ்கரன் அந்த ஆசிரமம் இடித்து தள்ளப்பட்டது.

 

இதுகுறித்து அவர் பல்லடம் காவல் நிலையத்தில் புகார் அளித்த நிலையில் விசாரணைக்கு வந்தார். அவர் இரண்டு பேருந்துகளில் பக்தர்களை அழைத்து வந்ததால் காவல்துறை உயர் அதிகாரிகள் எச்சரித்தனர். இதனால் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் பிச்சை எடுக்கப் போவதாகவும் கூறினார்.

 

Right Menu Icon