--- --:--:-- --

தமிழகத்தில் 10 மாவட்டங்களில் அடுத்த 5 நாட்களுக்கு கனமழை பெய்ய வாய்ப்பு ..!

3

மிழகத்தில் 10 மாவட்டங்களில் அடுத்த 5 நாட்களுக்கு கனமழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது. சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் இன்று காலை முதல் மிதமானது வரை மழை பெய்து வருகிறது.

 

இந்நிலையில் அடுத்த 5 நாட்களுக்கு நீலகிரி, கோவை, கடலூர், செங்கல்பட்டு உள்ளிட்ட மாவட்டங்களில் கனமழை பெய்யக்கூடும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

 

நாளை சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர் உள்ளிட்ட 14 மாவட்டங்களிலும் புதுச்சேரியிலும் கனமழை பெய்ய வாய்ப்பிருப்பதாகவும் வரும் ஏழு மற்றும் எட்டாம் தேதிகளில் தமிழகத்தின் பல மாவட்டங்களில் மிதமானது முதல் கனமழை பெய்யக்கூடும் எனவும் வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது.

 

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon